குங்கும காளியம்மன் கோயிலில் தேரோட்டம்!
ADDED :4855 days ago
தேவகோட்டை: தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி குங்கும காளியம்மன் கோயில் ஆனித்திருவிழா ஒன்பது நாட்களாக நடந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. 9 ம் நாளான நேற்று மாலை 5.30 மணிக்கு கிராமத்தினர் வடம்பிடிக்க தேரோட்டம் நடந்தது. குங்கும காளியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்தார். 6.45க்கு நிலையை அடைந்த அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.