ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
ADDED :5015 days ago
ஊட்டி: ஊட்டி அருகே கீழ் அப்புக்கோடு ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை நடந்தது. காலை 10.00 மணிக்கு சித்தி செல்வ விநாயகர், ஆனந்தமலை முருகன், ஏழு ஹெத்தையம்மன், நவகிரகங்களுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது. காலை 10.30 மணிக்கு லட்சுமணன், சுசிலா குழுவினரின் பஜனை; 12.00 மணிக்கு தஞ்சை திருமுருக அருளாளர் ஆனந்த சித்தரின் அருளுரை; சிறப்பு பூஜையும், 12.30 மணிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் பெள்ளன், ஓய்வு தமிழாசிரியர் ஆல்துரை ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. சிறப்பு விருந்தினராக அரசு மண்வள ஆராய்ச்சி நிலைய அலுவலர் ரேவதி கலந்துகொண்டார். ஏற்பாடுகளை ராமச்சந்திரன் செய்திருந்தார்.