தும்பைப்பட்டி சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் ஆடி தபசு விழா
ADDED :1645 days ago
மதுரை: மேலூர் தாலுகா, தும்பைப்பட்டி, சிவாலயபுரத்தில் அருள் பாலிக்கும் கோமதி அம்பிகை சமேத சங்கரலிங்கம், சங்கர நாராயணர் சுவாமிகள் கோயிலில் ஆடி தபசு விழா 13ம் தேதி துவங்கியது. விழாவில் தினசரி ஸ்வாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி தபசு 2-ம் நாள் விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 23.07.2021 அன்று காலை 9.15 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், சிறப்பு அர்ச்சனை, வழிபாட்டுடன், மாவிளக்கு, பொங்கலிட்டு ஸ்வாமிகளை வழிபாடு செய்வார்கள். அன்றைய தினம் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மனின் வேண்டுதலுக்கு ஏற்ப, ஆடி தபசு கட்சியாக சங்கர நாராயணர் ஸ்வாமியாக, ஹரியும் சிவனுமாக பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.