உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனா தொற்று அழிய கிராமத்தில் சிறப்பு பூஜை

கொரோனா தொற்று அழிய கிராமத்தில் சிறப்பு பூஜை

 கோலார் : கொரோனா தொற்று அழிய வேண்டுமென, கோலாரின் கிராமம் ஒன்றில், சிறப்பு பூஜை நடந்தது.நோய்கள் பரவும் போது, கோலாரின் சவுடதேனஹள்ளி கிராமத்தினர், கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜை நடத்தி, பிரார்த்தனை செய்வது வழக்கம்.

தற்போது கொரோனா தொற்று, மக்களை வாட்டி வதைக்கிறது. இதிலிருந்து தங்களையும், கால்நடைகளையும் காப்பாற்றும்படி, நேற்று சிறப்பு பூஜை செய்தனர்.மூன்று சாலைகள் கூடும் இடத்தில், சாணம் தெளித்து, கோலம் போட்டு; நடுவில் வேப்பிலையை வைத்தனர். பாலையும், அரிசி சாதத்தையும் படையலிட்டு பூஜித்தனர். கோவிந்தா என கோஷமிட்டனர். பின் படையலை தலை மீது சுமந்து, கிராமத்தில் ஊர்வலமாக சென்று, ஏரி, குளம், கிணற்றில் கரைத்தனர்.இதற்கு முன் கிராமத்தினர் செய்த பூஜைகள், நல்ல பலனளித்ததாம். தற்போதும் கொரோனாவிலிருந்து, தங்களை கடவுள் காப்பாற்றுவார் என, அக்கிராமத்தினர் நம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !