உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூன்றே நிமிடத்தில் 108 அஷ்டோத்திரம்!

மூன்றே நிமிடத்தில் 108 அஷ்டோத்திரம்!

சிவ சிவ என்கிலர் தீ வினை யாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே. _ திருமூலர் திருமந்திரம்

"சிவ சிவ என்கிலர் தீ வினை யாளர்"
ஆதாவது, முப்பிறவியின் தீய வினை செய்து இப்பிறப்பிலும் பாவங்கள் செய்து வருபவர் நாவில் "சிவ சிவ" என்ற சொல் வராது...

"சிவ சிவ என்றிடத் தீவினை மாளும"
அவ்வாறு பாவ செய்யல் செய்து வருபவர் "சிவ சிவ" என்று சொல்லிவிட்டால்.... அவர்கள் தீய வினைகள் எரிந்து விடும். மேலும் அவர்களை பாவங்கள் செய்யாமல் தடுக்கும்.

"சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்"
இவ்வாறு பாவங்கள் செய்ய விடாமல்,.... நன்மைகள் பல புரிய செய்து.. . தேவர்கள் ஆவார்கள்.

"சிவ சிவ என்னச் சிவகதி தானே"
தேவர்கள் ஆன பின்... "சிவ சிவ" என்றே பேரானந்தத்தில் சிவத்தில் ஆன்மா ஒடுங்கும்

அது சரி மூன்றே நிமிடத்தில் 108 அஷ்டோத்திரம் எப்படி... ? இந்த திருமந்திரத்தில் 9 முறை சிவ என்று வருகிறது. ஒரு நிமிடத்தில் 4 ங்கு முறை எளிதில் கூறமுடியும்... அப்படி என்றால் 3ன்று நிமிடத்தில் 12 முறை கூறியிருப்பிர்.12 முறை x 9 சிவ = 108 சிவ அஷ்டோத்திரம் சொல்வோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !