உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறங்காவலர் குழு தலைவராக சுப்பாரெட்டி மீண்டும் நியமனம்

அறங்காவலர் குழு தலைவராக சுப்பாரெட்டி மீண்டும் நியமனம்

திருப்பதி:திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக சுப்பாரெட்டியை மீண்டும் ஆந்திர அரசு நியமித்துள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

இக்குழுவைஆந்திர அரசு நேரிடையாக ஏற்படுத்தி வருகிறது. இதில் தென் மாநிலங்கள் மட்டுமல்லாமல் டில்லி மும்பையைச் சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 21ம் தேதியுடன் சுப்பாரெட்டி தலைமையில் செயல்பட்டு வந்த அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே சுப்பாரெட்டியை தேவஸ்தான அறங்காவலர் குழுவின் தலைவராக ஆந்திர அரசு மீண்டும் நியமித்து அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. ராஜ்யசபா உறுப்பினர் பதவியை எதிர்பார்த்திருந்த சுப்பாரெட்டிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் அறங்காவலர் குழு தலைவர் பதவியை அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !