கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத ஹோமம் துவக்கம்
ADDED :1552 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆஷாட சிரவண மாத ஹோமம் துவங்கியது.
திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் நாள் துவங்கி தினசரி ஹோமம் நடப்பது வழக்கம். அதாவது ஆஷாட சிரவன மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் உலக நன்மை வேண்டி தொடர்ந்து 30 நாட்களும் காலையில் ஹோமம் நடக்கிறது. இதன் முதல் நாளில் 6:00 மணிக்கு கலச ஸ்தாபனம், ஹோமம், அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. ஆரிய வைசிய சமூக நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.