திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை
ADDED :1898 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடி மாத வளர்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. இதை முன்னிட்டு கோவிலில், அதிகார நந்தி, சிறிய நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தி ஆகியவற்றிற்கு பால், தயிர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, இளநீர், உள்ளிட்ட பல்வேறு வாசன திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.