உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் ஆடி தபசு, பிரதோஷ பூஜை

சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் ஆடி தபசு, பிரதோஷ பூஜை

மதுரை: மேலூர் தாலுகா, தும்பைப்பட்டி, சிவாலயபுரத்தில் அருள் பாலிக்கும் கோமதி அம்பிகை சமேத சங்கரலிங்கம், சங்கர நாராயணர் சுவாமிகள் கோயிலில் நேற்று (21ம் தேதி) ஆடி தபசு விழா 9-ம் நாள், மாலை 4 மணிக்கு கணபதி ஹோமம்,  பூஜைகளுடன்,  ஸ்வாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், வளர்பிறை பிரதோஷ பூஜை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு ஸ்வாமிகளுக்கு, எண்ணை காப்பு சாற்றி, 15 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன், அரசு வழிகாட்டுதலின்படி, மாலை நேர பூஜையில் கலந்து கொண்டு,  சிவபுராணம், கோளாறு பதிகம், அம்மன் திருப்பதிகங்கள் பாராயணம் செய்தனர். கோமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில்,  கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இன்றைய இறைபணியில் பூஜை உபயதாரர்கள் கோட்டப்பட்டி திரு. கண்ணன், மதுரையை சேர்ந்த திரு குருநாதன், தேவசேனா குடும்பத்தினர். கோயில் அர்ச்சகர் ராஜேஷ், சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !