நுாக்கலம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை உற்சவம்
ADDED :1529 days ago
உத்திரமேரூர்: ஆடி பவுர்ணமியை ஒட்டி, உத்திரமேரூர் துர்க்கை அம்மன் மற்றும் நுாக்கலம்மன் கோவிலில், ஊஞ்சல் சேவை உற்சவம் நடந்தது.அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமான ஆடி மாதத்தின், முதல் வெள்ளி பவுர்ணமி தினமாகவும் இருந்ததால், கூடுதல் விசேஷ தினமாக அமைந்தது. இதையொட்டி, உத்திரமேரூர் துர்க்கை அம்மன் கோவிலில், ஊஞ்சல் சேவை உற்சவம் விமரிசையாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளிய துர்க்கையம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல். எல்.எண்டத்துார் சாலையில் உள்ள நுாக்கலம்மன் கோவிலில், ஊஞ்சல் சேவை உற்சவம் நடந்தது.