பூவேந்தியநாதர் கோயிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED :1604 days ago
சாயல்குடி : மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லி அம்மன் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இளையான்குடிமாற நாயனார் அடியார் திருக்கூட்டம், பரமக்குடி கைலாசநாதர் திருக்கூட்டம் இணைந்து உலக நன்மைக்கான கூட்டுப்பிரார்த்தனை செய்தனர்.மூலவர்களுக்கு 11 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை மகா சபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.