உஜ்ஜைனி கோயிலில் கூட்ட நெரிசல்: பலர் காயம்
ADDED :1551 days ago
போபால்: மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் காயமடைந்து உள்ளனர்.
நேற்று அந்த கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் கூடினர். ஒருவரும் சமூக விலகலை கடைபிடிக்காமல் கூடியிருந்தனர். அப்போது அந்த கோயிலுக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முன்னாள் முதல்வர் உமா பாரதி உள்ளிட்டோர் வந்தனர். இதனால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. யாராலும் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. கோயிலுக்குள் செல்லவும், விஐபிக்களை பார்க்கவும் முண்டியடித்தனர். இதில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற போலீசாரும் காயமடைந்தனர்.