சிவகங்கை காஞ்சி சங்கரமடத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி
ADDED :1607 days ago
சிவகங்கை: சிவகங்கை காஞ்சி சங்கரமடத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியின் ஜெயந்திவிழா நடந்தது.இதை முன்னிட்டு மடத்தில் கணபதி, மிருத்தியஞ்ச, நவக்கிரக, ஆவஹந்தி, சுதர்சன ேஹாமங்கள் நடந்தது. சுவாமியின் திருவுருவ படத்திற்கு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. யாகங்களை சேதுராமன் வாத்தியார் செய்திருந்தார்.தமிழ்நாடு பிராமணர் சங்க மாவட்ட தலைவர் கே.ஆர்.,வைத்தியநாதன், நிர்வாகிகள் ராமசுப்பிரமணியன், ஜெயராமன், குருசங்கர் பங்கேற்றனர்.