ஆடிப்பெருக்கு நாளில் ரெங்கமலையில் பக்தர்களுக்கு அனுமதி
ADDED :1608 days ago
வேடசந்துார், : வேடசந்துார் அருகே ரெங்கமலையில் ஆடிப்பெருக்கு நாளில் பக்தர்களுக்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் வடகோடியில் ரெங்கமலை கணவாய் உள்ளது. மலையின் மீது மல்லீஸ்வரர் கோயில், அதற்கு கோயில் கம்பம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி 18ம் நாளான ஆடிப்பெருக்கையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி மல்லீஸ்வரரை தரிசிப்பர்.கொரோனா தொற்று பரவலால் கடந்த ஆண்டு ஆடி18 ல் இங்கு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தாண்டு வரும் ஆடிப்பெருக்கு நாளில் (ஆக.3) கொரோனா விதிகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என அறக்கட்டளை நிர்வாகி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.