உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை அம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா

கோட்டை அம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா

 தேவகோட்டை : தேவகோட்டை கோட்டை அம்மன் கோயில் ஆடி பொங்கல் விழா ஆடி முதல் செவ்வாயன்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

தினமும் பீடத்திற்கு காலை, மாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது.அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரண்டாம் ஆடிச் செவ்வாயான நேற்று ஊர் பொங்கல் விழா நடந்தது. கோயிலில் பொங்கல் மட்டுமே வைங்கப்பட்டு பூஜை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். பெண்கள் மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !