பழநி மலைக் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை
ADDED :1550 days ago
பழநி: பழநி மலைக்கோயிலில் கொரோனா ஊரடங்கு தளர்வு பின் நேற்று (ஜூலை 27) உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 112 கிராம் தங்கமும், 1125 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ 1 கோடியே 2 லட்சத்து 31 ஆயிரத்து 250 மற்றும் 15 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், மதுரை ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயன் உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.