உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் இன்று 28.07.2021 உண்டியல்கள் திறந்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து , திருச்சி மண்டல இணை ஆணையர் மற்றும் இரட்டை பூட்டு அலுவலர்  அர.சுதர்சன் முன்னிலையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகின்றன. உதவி ஆணையார்கள்   கு. கந்தசாமி , செ.மாரியப்பன் , மேலாளர் திருமதி உமாமகேஸ்வரி ,உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் ,திருக்கோயில் பணியாளர்கள், மற்றும் தன்னார்வர்கள்   உண்டியல் கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டத்தில் ரூபாய்  44, 93, 020ம் , தங்கம் 94 கிராமும் , வெள்ளி 817 கிராமும் மற்றும் 50 வெளிநாட்டு ரூபாய்தாள்கள் கிடைக்கப்பெற்றன .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !