உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாணியக்குடி முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா

வாணியக்குடி முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாணியக்குடி முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி விழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர். பின்பு கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட முளைப்பாரிகளை கண்மாய் நீரில் கரைத்து நேர்த்திகடன் நிறைவேற்றினர். விழாவை முன்னிட்டு பெண்கள் கும்மி ஆட்டம் ஆடியும், இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடியும், நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !