ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் சஷ்டி பூஜை
ADDED :1685 days ago
ராமநாதபுரம் : வழிவிடு முருகன் கோயிலில் ஆடி மாத சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. முருக பெருமானுக்கு தேன், இளநீர், பன்னீர், உள்ளிட்ட அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை நடந்தது. முருகர், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.