ஆளவந்தாருக்கு உற்சவம்: நெம்மேலியில் விசேஷம்
ADDED :1590 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி பகுதியைச் சேர்ந்தவர் ஆளவந்தார். இவரது பெயரில் தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை 1,054 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கிறது.
அவரது உயில் சாசன விருப்பத்தின்படி, மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள், திருப்பதி வெங்கடேச பெருமாள் ஆகிய கோவில்களில், முக்கிய உற்சவ சேவை நடத்தப்படுகிறது. அவரது நினைவுநாள், ஆடி பூரட்டாதி நட்சத்திர நாளில், நினைவிடத்தில் அவருக்கு, 107ம் ஆண்டு குருபூஜை உற்சவம் நடந்தது. சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடத்தி, ஸ்தலசயன பெருமாள், நித்ய கல்யாண பெருமாள் கோவில்களின் பரிவட்ட மரியாதையுடன், திருவாய்மொழி சேவையாற்றினர். அன்னதானம் வழங்கப்பட்டது.