விருட்ச விநாயகர் கோவிலில் ஆடி கிருத்திகை விழா
ADDED :1585 days ago
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, மானாம்பதி - காஞ்சிபுரம் சாலை, உக்கம்பெரும்பாக்கத்தில், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், ஆடி கிருத்திகை விழா, விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி,நேற்று, காலை 9:00மணிக்கு, வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்பிரமணியருக்கு, மஹா அபிஷேக அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. கிருத்திகை நட்சத்திரத்தையொட்டி, அக்னி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.