திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் அனுமதி
ADDED :1580 days ago
திருத்தணி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழாவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அரசு தடை விதித்தது.
அதன்படி, கடந்த 31ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, அனைத்து சிறப்பு பூஜைகளும் பக்தர்களின்றி நடந்தன. இந்நிலையில், நேற்று காலை 6:00 மணி முதல் பக்தர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. ஒரு சில பக்தர்கள் காவடிகளுடன் வந்து தரிசனம் செய்தனர். வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் நேற்று குறைவாகவே காணப்பட்டது.