ரூபாய் நோட்டு அலங்காரத்தில் மகிஷாசுரமர்த்தினி அருள்பாலிப்பு
ADDED :1638 days ago
தஞ்சாவூர் : தஞ்சாவூரை சுற்றி சோழ மன்னர்களால் 8 காவல் தெய்வங்கள் எல்லைகளில் உருவாக்கப்பட்டு வழிபாடு செய்து வந்துள்ளனர். அதன்படி, தஞ்சை வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் ரோட்டில் உள்ள ஸ்ரீ கேசவதுஸ்வர் சமேத ஞானாம்பிகை கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி பின்பற்றி கலந்து கொண்டனர்.