அனைவரும் சமம்
ADDED :1798 days ago
மெக்கா நகரிலுள்ள காபா புதுப்பிக்கப்பட்டபோது, அங்கு ‘ஹஜருல் அஸ்வத்’ என்ற கல்லை முதலில் பதிப்பது யார் என்று சண்டை ஏற்பட்டது. நாளை காபாவுக்குள் முதலில் வருபவரிடம் இந்த பிரச்னையை விட்டுவிடுவோம் என முடிவு எடுத்தனர். மறுநாள் அங்கே நாயகம் வந்தபோது அவரிடம் இந்த பிரச்னையை கூறினர். அதற்கு அவர் போர்வை ஒன்றை கொண்டுவர சொன்னார். போர்வையின் மீது கல்லை வைத்து அனைவரையும் போர்வையை துாக்க சொன்னார். அனைவரும் ஒற்றுமையுடன் துாக்கினர்.
தலையை சீவ பயன்படும் சீப்பு எப்படி சமமாக இருக்கிறதோ அதுபோல் அனைவரும் சமமாக இருக்க வேண்டும்.