நல்லதை கற்போம்
ADDED :1634 days ago
மேலைநாட்டினரிடம் உள்ள தவறான பழக்கங்களை மட்டும் நாம் பின்பற்றுகிறோம். அவர்களிடம் உள்ள நல்ல பண்புகளை பார்ப்பதில்லை. அவற்றை பின்பற்றினால் நாம் வெற்றி பெறலாம்.
* ஒருவர் சிறு உதவி செய்தாலும் அவருக்கு பலமுறை நன்றி சொல்வர்.
* சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பார்கள்
* பிறர் விஷயத்தில் தலையிடமாட்டார்கள்.
* நேரம் தவறாமைக்கு அவர்கள் உதாரணம்.
* போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பார்கள்
* பிறரிடமுள்ள நல்ல விஷயத்தை கற்றுக் கொள்ள விரும்புவர்.