மனபாரம் தீர ஏரல் வாங்க!
ADDED :1631 days ago
சேர்மன் அருணாசல சுவாமிகள் கோயில் துாத்துக்குடி மாவட்டம் ஏரலில் உள்ளது. முன்னோர் வழிபாட்டு நாளான ஆடி அமாவாசையன்று இவரை தரிசித்தால் மனதிலுள்ள பாரம் அனைத்தும் தீரும்.
ஒருநாள் தன் சகோதரர் கருத்தப் பாண்டியனை அழைத்து ‘‘தம்பி! 1908 ஜூலை 28 ஆடி அமாவாசையன்று மதியம் 12:00 மணிக்கு கடவுளின் திருவடியை நான் சேர இருக்கிறேன். ஏரலுக்கு தென்மேற்கில் ஓடும் தாமிரபரணி ஆற்றின் வடகரையிலுள்ள ஆலமரத்தின் அருகில் சமாதியில் வைத்து மண்ணும், மலர்களும் இட்டு மூடு. அப்போது மேலே கருடன் வட்டமிட்டு பறக்கும்’’ என்றார். அதன்படியே அருணாசல சுவாமிகள் கடவுளின் திருவடியைச் சேர்ந்தார். கருத்த பாண்டியனும் சமாதி அமைத்தார்.
அன்று முதல் ஏரல் அருணாசல சுவாமிகள் தன்னை நாடி வருவோரின் குறைகளை தீர்த்து அருளாசி வழங்குகிறார். குறிப்பாக மனநிலை பாதித்தவர்கள் இங்கு தங்கி குணமடைந்து செல்கிறார்கள். பிரசாதமாக திருமண், தீர்த்தம் தருகின்றனர். ஆடி அமாவாசையன்று கொடியேற்றப்பட்டு 12 நாள் திருவிழா நடக்கும். விளாமிச்ச வேர் சப்பரத்தில் சேர்மன் சுவாமி தினமும் எழுந்தருள்வார். இங்கு வேண்டி குழந்தை வரம் பெற்றவர்கள் சேர்மக்கனி, சேர்மராஜ் என பெயர்களைச் சூட்டுகின்றனர்.
எப்படி செல்வது: திருநெல்வேலியில் இருந்து ஏரல் 45 கி.மீ.,
விசேஷ நாட்கள்: ஆடி அமாவாசை, தை அமாவாசை
நேரம் : காலை 6:00 – 11:00, மாலை 4:00 இரவு8:00 மணி