ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்று வைபவம்
ADDED :1558 days ago
ராமேஸ்வரம்: ஆடி திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா ஆக.,1ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 11 ம் நாள் விழாவான நேற்று மாலை 4:20 மணிக்கு 3ம் பிரகாரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, பிரியாவிடை அம்மன் மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கமல வாகனத்தில் எழுந்தருளினர். சுவாமி, அம்மனுக்கு கோயில் குருக்கள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடத்தினர் பின் மகா தீபாராதனை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் பழனிக்குமார், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பேஷ்கார்கள் கலைச்செல்வம், முனியசாமி, கோயில் ஊழியர்கள் பலர் தரிசனம் செய்தனர்.