நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி பூஜை
ADDED :1616 days ago
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது. மாரியம்மனுக்கு சந்தனம், பால், பன்னீர், போன்ற 16 வகையான அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதுபோலவே நத்தம் பகுதி பகவதிம்மன், காளியம்மன் கோவில்களிலும் ஆடி மாத வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடந்தது. கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்பு நலன் கருதி பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.