உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் இரு நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இரு நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இரண்டு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என பொது தீட்சிதர்கள் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு கொரோனா பரவல் குறித்து அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை வெடித்த வருகிறது. இந்நிலையில் முக்கிய கோவில்கள் மற்றும் ஆடி மாத திருவிழாக்கள் பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் கோவில் வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !