பொள்ளாச்சி கோவிலில் கருட பஞ்சமி விழா
ADDED :1678 days ago
பொள்ளாச்சி: ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், கருட பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது. விழாவையொட்டி, கருடாழ்வாருக்கு, பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் என, ஒன்பது வகையான அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, வெட்டிவேர், பாசி மாலைகள் கொண்டு அலங்கார பூஜை நடந்தது. கருடாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், கருட பகவானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.