உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளி விழாவில் கூழ் ஊற்றி நேர்த்திக்கடன்

ஆடி வெள்ளி விழாவில் கூழ் ஊற்றி நேர்த்திக்கடன்

 கோவை: ஆடி வெள்ளியை ஒட்டி, அம்மனுக்கு கூழ் ஊற்றி, நேர்த்திக்கடன் செலுத்தினர் சுமங்கலி பெண்கள்.அம்மன் கோவில்களில், ஆடிவெள்ளி விழா நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. கோவை தர்மராஜா கோவில் வீதியிலுள்ள காளியம்மன் கோவில் முன்பு, சுமங்கலி பெண்கள்அம்மனுக்கு நேர்த்திக்கடனாக, பக்தர்களுக்கு கூழ் ஊற்றினர்.மஞ்சள் கொம்பு, வளையல், குங்குமம், மஞ்சள் ஆகியவை கொண்ட தொகுப்பை வழங்கினர். சுமங்கலி பெண்கள் பெற்றுச்சென்றனர். கோவில் சார்பில் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வாசலில் நின்றவாறு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !