வீட்டில் பொங்கல் வைத்த பக்தர்கள்
ADDED :1616 days ago
வீரபாண்டி: கொரோனாவால், ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக, நேற்று பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கும். நடப்பாண்டு நடக்காததால், சமூக இடைவெளியை கடைபிடித்து, பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள், அங்கிருந்து புனிதநீரை எடுத்து சென்று, அவரவர் வீடுகளில் ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.