விநாயகர் ஊர்வலம் தடுத்தால் போராட்டம் வெடிக்கும்:. ஹிந்து முன்னணி எச்சரிக்கை
ADDED :1520 days ago
திண்டுக்கல்: விநாயகர் சிலை ஊர்வலத்தை அரசு தடுத்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும், என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:செப்., 10ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. தமிழகம் முழுதும் 1.25 லட்சம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, ஊர்வலமாக எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்.விநாயகர் சிலை ஊர்வலத்தை அரசு தடுத்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அரசுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும். விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர். அவர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும். கடந்த 100 நாட்களில், தி.மு.க., அரசு ஒன்றுமே செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.