உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாத்தூர் கோயிலுக்கு புதிய பட்டர் ; பழைய பட்டர் குடும்பத்தினர் எதிர்ப்பு

சாத்தூர் கோயிலுக்கு புதிய பட்டர் ; பழைய பட்டர் குடும்பத்தினர் எதிர்ப்பு

சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் வெங்கடாஜலபதி கோயிலிலுக்கு புதிய பட்டராக துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதுாரை சேர்ந்த சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.

அவர் பணியில் சேர்ந்த போது அங்கு பட்டராக பணியாற்றிய ரெங்கநாதன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க போலீசார் சமரசம் செய்தனர்.சாத்துார் வெங்கடாஜல பதி கோயிலில் ரெங்கநாதன் பட்டர் பணிபுரிந்து வந்த நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் சாத்துார் இக்கோயிலுக்கு புதிய பட்டராக சீனிவாசனை நியமனம் செய்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. இதைதொடர்ந்து அவர் பணியில் சேர்ந்தார். இதற்கு ரெங்கநாதன் பட்டர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கோயில் செயல் அலுவலர் தனலட்சுமி அரசு வழங்கிய உத்தரவை காண்பித்தார். அங்கு வந்த போலீசாரும் சமரசம் செய்ய, புதிய பட்டர் சீனிவாசன் பூஜைகளை செய்தார்.சீனிவாசன் கூறுகையில், புதுாரில் உள்ள பெருமாள் கோயிலில் 10 ஆண்டுகள் பூஜை செய்துள்ளேன். வைதீக முறைப்படி பூஜைகள் பயிற்சி பெற்றுள்ளேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !