பழநி மலைக்கோயிலில் உண்டியல் எண்ணிக்கை
ADDED :1881 days ago
பழநி: பழநி மலைக்கோயிலில் நேற்று (ஆக.17) உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 121 கிராம் தங்கமும், 1562 வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ 1 கோடியே 10 லட்சத்து 75 ஆயிரத்து 090 மற்றும் 12 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் உதவி ஆணையர் அனிதா திருப்பூர் மாவட்டம் அய்யம்பாளையம், வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் உதவி ஆணையர் மேனகா உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.