ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் வரலட்சுமி பூஜை
ADDED :1868 days ago
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் வரலட்சுமி பூஜையை முன்னிட்டு மஞ்ச மாதாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மூலவர்கள் வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட கொலு மண்டபத்தில் மஞ்சமாதா சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். தலைமை குருசாமி மோகன் சுவாமி பூஜைகளை செய்தார். ஏற்பாடுகளை வல்லபை ஐயப்பன் சேவை நிலை அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.