உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

கோவை; ஆனி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை பகுதியில் மலைமேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மூலவர் சிவபெருமாள் மற்றும் நந்தி பெருமானுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் சர்வ அலங்காரத்தில் நந்தி பகவான் மற்றும் மூலவர் தர்மலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமான் மற்றும் நந்தி பகவானை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !