இன்று திருவாதிரை விரதம்; நடராஜரை வழிபட மகிழ்ச்சியான வாழ்வு அமையும்!
திருவாதிரை விரதம் என்பது சிவபெருமானுக்குரிய மிக முக்கிய விரதங்களில் ஒன்றாகும். நடராஜப் பெருமானின் நடனத்தைக் கொண்டாடும் உன்னதமான நாளாக இது கருதப்படுகிறது.
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் இருப்பவர் சிவன். திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். இன்று அனைத்து சிவாலயங்களிலும் நடராஜருக்கு திருமஞ்சனம் நடக்கும். முருகப்பெருமான் இந்த விரதம் இருந்து ஈசனின் அருள்பெற்றார். திருவாதிரை நடராஜருக்குரிய சிறப்பான விரதநாள் ஆகும். நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலேயே அண்டசராசரங்களும் இயங்குகின்றன. வீட்டில் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். திருவாதிரை விரதம் இருந்தால் குடும்பத்தில் அமைதி, கணவன்-மனைவி இடையே ஒற்றுமை கிடைக்கும். மாதந்தோறும் திருவாதிரை விரதமிருந்து கயிலாயத்தில் வாழும் பேறு பெறுவோம்!