பழநியில் கோயில் முன் திருமணங்கள்
ADDED :1593 days ago
பழநி: பழநியில் நேற்று ஆவணி மாத வளர்பிறை முகூர்த்தம் என்பதால் அதிக அளவில் திருமணங்கள் நடைபெற்றன.திருமண மண்டபங்கள், மடங்களில் திருமணம் நடைபெற்றது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோயில்களில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சில திருமணங்கள் கோயில் வாயில் முன்பு நடைபெற்றது.மேலும் திருமணம் முடித்த தம்பதியினர் கோயிலுக்கு செல்ல வழியில்லாமல் பாத விநாயகர் கோயில், திருஆவினன்குடி கோயில் வாயிலில் நின்று தரிசனம் செய்தனர். மேலும் நகர ஹோட்டல்களில் மற்றும் கடைவீதி, ஆர்.எப் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு இருந்தனர்.