சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை ஆவணி அவிட்டம்
ADDED :1532 days ago
புதுச்சேரி-கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நாளை 22ம் தேதி யஜூர் வேத ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.கருவடிக்குப்பம், குரு சித்தானந்த சுவாமி கோவிலில், நாளை (22ம் தேதி) யஜூர் வேதத்தை சேர்ந்தவர்களுக்கு ஆவணி அவிட்டம் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.அதனையொட்டி, நாளை காலை 5:00 மணிக்கு துவங்கி, பகல் 12:00 மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை குழுக்களாக பூணுால் அணிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி பிராமண சங்கம் மற்றும் சாய் சங்கர பக்த சபா சார்பில், சுக்ர சாந்தியுடன், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு 98423 29770, 98423 27791 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.