திருவந்திபுரம் கோவிலில் ஹயக்ரீவர் ஜெயந்தி விழா
ADDED :1523 days ago
கடலுார்: திருவந்திபுரம் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பெருமாள் ஆலயங்களில் ஹயக்ரீவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. கடலுார் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் மலை மீது அமைந்துள்ள ஹயக்ரீவர் சன்னதியில் நேற்று ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இக்கோவிலில் கடந்த 12ம் தேதி ஹயக்ரீவர் ஜெயந்தி விழா துவங்கியது. கடந்த 10 நாட்களாக சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஜெயந்தி விழாவான நேற்று சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.