உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்காமீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

திருக்காமீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

 வில்லியனுார: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில், நேற்று நடராஜர் உடனுறை சிவகாம சுந்தரி சுவாமிக்கு சாயரட்சை கால அபிஷேகம் நடந்தது. இதில், பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 32 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடந்தது.அலங்கரிக்கப்பட்ட நடராஜர் உடனுறை சிவகாமசுந்தரி கோவில் வளாகத்தில் உள் புறப்பாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !