ஆவணி அவிட்டம், வேத பாராயாணம் வாசிப்பு
ADDED :1522 days ago
திருப்புவனம்: திருப்புவனத்தில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பிராமணர்கள், ஆச்சார்யார்கள், வேளார்கள் உள்ளிட்டோர் பூணூல் மாற்றி வேதபாராயணம் படித்தனர். பவுர்ணமியும் அவிட்ட நட்சத்திரமும் கூடிய நாளில் படைத்தல் கடவுளான பிரம்மனுக்கு வேதம் கிடைத்த நாள் ஆவணி அவிட்டமாக கடைபிடிக்கப்படுகிறது. திருப்புவனம் முருகன் ஆலயத்தில் வேத பாராயன ஆசிரியர் முரளி தலைமையில் பிராமணர்கள், ஆச்சார்யார்கள் உள்ளிட்டோர் பூணூல் மாற்றி வேதபாராயணம் படித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிந்தராஜன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.