உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குண்டுதாங்கிய ஐயனாரப்பன் கோவிலில் திருக்கல்யாணம்

குண்டுதாங்கிய ஐயனாரப்பன் கோவிலில் திருக்கல்யாணம்

 புதுச்சேரி : குண்டுதாங்கிய ஐயனாரப்பன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.தட்டாஞ்சாவடி பொற்கலை, பூரணி உடனுறை குண்டுதாங்கிய ஐயனாரப்பன் கோவிலில், உற்சவ விழா கடந்த 20ம் தேதி துவங்கியது.

தினமும் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.நேற்று மாலை 3.30 மணிக்கு ஊரணி பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பொற்கலை-பூரணி உடனுறை குண்டுதாங்கிய ஐயனாரப்பன் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.விழாவையொட்டி கோவில் சன்னதியில் உள்ள முத்து மாரியம்மன், கெங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இன்று மாலை 6.௦௦ மணிக்கு சுவாமிக்கு மஞ்சள் நீராட்டுடன் உற்சவ விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !