உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 10ம் நுாற்றாண்டு புத்தர் சிலை, சிவலிங்கம் மீட்பு

10ம் நுாற்றாண்டு புத்தர் சிலை, சிவலிங்கம் மீட்பு

 காளையார்கோவில்: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மல்லல், சிரமத்தில் கிடைத்த 10ம் நுாற்றாண்டு புத்தர் சிலை, சிவலிங்கத்தைதாசில்தார் பாலகிருஷ்ணன் சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில்ஒப்படைத்தார்.மல்லலில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 4 அடி உயரம், 3 அடி அகலமுள்ள புத்தர் சிலை கிடைத்தது. இது கி.பி., 10ம் நுாற்றாண்டை சேர்ந்தது. மறவமங்கலம் அருகே சிரமம் கண்மாயில் பொதுமக்கள் மீன்பிடித்த போது நீருக்குள் மூழ்கி கிடந்த முக்கால் அடிஉயரமுள்ள சிவலிங்கத்தைகண்டெடுத்தனர்.கலெக்டர் மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தலால் காளையார்கோவில் தாசில்தார் பாலகிருஷ்ணன் இரு சிலைகளையும் சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் நேற்று ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !