வில்லியனூர் வரதராஜப்பெருமாள் கோவிலில் இன்று கொடியேற்றம்
ADDED :4853 days ago
புதுச்சேரி: வில்லியனூர் வரதராஜப் பெருமாள் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் நடக்கிறது.வில்லியனூர் வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று துவங்குகிறது. காலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு காலை, மாலை பெருமாள் வீதி புறப்பாடு, காலை 11 மணிக்கு திருமஞ்சனம் நடக்கிறது.வரும் 3ம் தேதி காலை 8.30 மணிக்கு திருத்தேர் உற்சவம் நடக்கிறது. வரும் 7ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர் ஹரிஹரி நமோநாராயணா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.