முறையூர் மீனாட்சி கோயில் ஆனி திருவிழா துவக்கம்!
ADDED :4853 days ago
சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சிசொக்கநாதர் கோயில் ஆனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து கொடியேற்றம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தினமும் மண்டகப்படி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இரவு பூப்பல்லாக்கு, ரிஷபம், காமதேனு, அஸ்வம், அன்ன வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கும். விழாவின் 8ம் நாளான ஜூலை 1 அன்று சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். ஜூலை 2ல் தேரோட்டமும், ஜூலை 3ல் சுவாமி மஞ்சள் நீராட்டு நடைபெறும். முறையூர் கிராமத்தினர் ஏற்பாட்டை செய்தனர்.