மாயூரநாத சுவாமி கோயிலில் கொடியேற்றம்
ADDED :4853 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில் ஆனிபெருந்திருவிழா நேற்று காலை காலை 10.30 மணிக்கு துவங்கியது. சிறப்பு யாகம், பூஜைகள் நடந்தன. நெல்கதிர், தர்பைபுல், பூக்களால் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு, 11.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. பத்துநாள் நடக்கும் விழாவில், சுவாமி, அஞ்சல் நாயகி அம்மன் சப்பரம் மற்றும் பல்வேறு வாகனங்களில் இரவில் வீதி உலா வருவர். ஒன்பதாம்நாள் விழாவில் கோயில் நிர்வாகம் சார்பில் தேரோட்டம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை தக்கார் குருநாதன், நிர்வாக அதிகாரி வேல்முருகன் செய்து வருகின்றனர்.