உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பில் ஜூன் 29 முதல் பிரம்மோற்ஸவ விழா துவக்கம்

வத்திராயிருப்பில் ஜூன் 29 முதல் பிரம்மோற்ஸவ விழா துவக்கம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் ஜூன் 29 முதல் கொடியேற்றத்துடன் பிரம்மோற்ஸவ விழா துவங்குகிறது. வத்திராயிருப்பில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது சேதுநாராயணப் பெருமாள் கோயில். இப்பகுதியை ஆண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்ற மன்னர் காலத்தில் இக்கோயில் எழுப்பப்பட்டது. ஊரின் மையப்பகுதியில் உள்ள இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்ஸவ உற்ஸவம் 7 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டு 29 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூலை 1 முதல் சுவாமி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா செல்கிறார். ஜூலை 7 ல் ஸப்தாவர்ண பல்லாக்கு அலங்காரத்துடன் நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் ஆன்மிக சொற்பொழிவு, நடன, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில், சேவா சமிதி டிரஸ்ட் செயலாளர் நாராயணன், தலைவர் அழகர், நிர்வாகிகள், கோயில் நிர்வாக அதிகாரி சரவணன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !