52 குண்டங்கள் அமைத்து சிவன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4853 days ago
விருதுநகர்: விருதுநகர் சிவன் கோயிலில் ஜூலை 5 ல் 52 குண்டங்கள் அமைத்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விருதுநகர் சிவன் கோயிலில் 1996 ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கு பின் தற்போது ஜூலை 5 ல் காலை 8.40 முதல் 10 மணிக்குள், முதன் முறையாக 52 குண்டங்கள் கொண்ட யாகசாலை அமைத்து பிள்ளையார்பட்டி பிச்சை குருக்குள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் தலைவர் ரத்தினகுமார், செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் ரமேஷ்குமார், உப தலைவர் நாகராஜன், சுப்பிரமணியன், இணை செயலாளர் ராஜகுரவன் ஆகியோர் செய்து வருகின்றனர்.